கோக்கு மாக்கு
Trending

மீண்டும் சர்ச்சையில் திமுக மணல் மாபியா கைகளில் மணல் டெண்டர்!

சமீபத்தில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அமலாக்கத்துறை சோதனையின் மூலம் முழுவதும் மணல் கொள்ளைகள் தமிழுகம் முழவதும் முழுவீச்சில் அரங்கேறி வருவது வெளி உலகுக்கு தெரியவந்தது . மணல் அதிகம் அள்ளியதால் பல ஆறுகளில் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வண்டல் மண் அள்ள அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வணிக ரீதியாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கனிம வளம் திருடு போவது கண்காணித்து தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை , வருவாய் துறை , கனிம வ வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதாக புகார் வந்தது .

இந்தநிலையில் தான் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத வரி ஏய்ப்பு மற்றும் மணல் கொள்ளை நடைபெற்றதன் விவரங்கள் முதற்கட்ட விசாரணை மற்றும் சில ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை மேற்கொண்ட ரெய்டுகளின் போது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக முக்கிய ஆதாரங்களும் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதியப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி சம்மந்தபட்ட துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடைபெற்றது.

மத்திய அமலாக்கத் துறை 4730 கோடி ரூபாய் அளவிற்கு மணல் கொள்ளையின் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய மூவரும் ( மணல் தொழிலில் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் ) தான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மணல் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆதாரங்கள் காரணமாக ஆளும்கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் கரிகாலன் ரத்தினமும் மணல் தொழிலில் இருந்து சற்று விலகி நின்றனர் என்பதை விட ஆளுங்கட்சி தலைமையானது விலகி இருக்க உத்திரவிட்டது .

இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா என்பவருக்கு மணல் டெண்டர் ஒதுக்கப்பட்ட நிலையில், அவரால் தொடர்ந்து சரியான முறையில் மணல் பிசினஸ் செயல்படுத்த முடியாத அளவிற்கு சூழ்நிலை மாறிவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்ட முடியாமல் தவித்துள்ளார் . இந்த சூழ்நிலையில் தான் சில மாதங்களாக அமைதி காத்த மூவரும் தற்போது மீண்டும் மணல் விற்பனையில் ஈடுபட தொடங்கியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் தங்களுக்கு இந்த தொழில் வேண்டாம் என்று ஒதுங்கிய போதிலும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் ஒப்புதலோடு மீண்டும் மணல் காண்ட்ராக்ட் இவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button