கோக்கு மாக்கு
Trending

சாலையின் நடுவே மாடுகள் ஆலோசனை – நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்

திருச்சி ரோடு

திண்டுக்கல், திருச்சிசாலையில் சிட்டி ஆஸ்பத்திரி மேம்பாலம் அருகே சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .

கோவிந்தாபுரம் மெயின் ரோடு

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் பகல் இரவு என 24 மணி நேரமும் மாடுகள் சுற்றி திரிகின்றன.

இது குறித்து மாநகராட்சி, கால்நடை பராமரிப்பு துறை , மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் ஆகியோரிடம் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது . மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை என புலம்பி வருகின்றனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button