ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி!
ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவம் பார்ப்போரை அச்சமடையச் செய்துள்ளது!
ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்!