திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை சேர்த்து வைக்க கூறி இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் . மேலும் சம்மந்தபட்ட எதிர் தரப்பு நபரான சின்னதுரையின் தந்தை மயில்வாகனம் டெல்லி உயர்நீதி மன்றம் வரை செல்வேன் போலீஸ் அதிகாரி பெரிய ஆளா … தமிழக முதலமைச்சர் பெரிய ஆளா… என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சின்னதுரையை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் இல்லை என்றால் செத்து விடுவேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது