
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு துணை ராணுவ படை (CRPF) வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
பிஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லைப் பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சூழலில் நேற்று (பிப்ரவரி 11) தேடுதல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது தந்தியவாடா மாவட்டத்தில் உள்ள கீதம் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.