திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார்3000 லோடு மணல் திருட்டு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான உடைப்பான் குளம் கிராமம் அயன் புஞ்சை (பொட்டல் புதூர்) சர்வே எண் 377ல் ஏ .2 சென்ட் 31 ஐ ஆதீனத்திலிருந்து அபிரஹாம் குமார் மற்றும் ஜோஸ் அபிரஹாம் என்பவருக்கு இரண்டு ஏக்கர் சென்ட் 26 புஞ்சை நிலத்தை குத்தகைக்காகவும் 05 சென்ட் இடத்தை மனைக்காகவும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது, மேற்படி நபர் வெளி நாட்டிலிருந்த நேரத்தில் உடப்பான் குளம் மராமத்து செய்யும் பொழுது ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட புஞ்சையில் இருந்து அத்துமீறி ஆக்கிரமித்து தென் வடல் 104.0 மீட்டர் நிலமும் கிழமேல் 109 மீட்டர் அகலமும் 6 அடி உயரத்தில் ஆழப்படுத்தி சுமார் 3000 லோடுகள் மணலை எடுத்து திருடி சென்றுல்ளனர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்….