Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு ஐயப்ப பக்தர்கள் போராட்டம்*
Iam sorry iyyappa” என்று கான பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கான பாடகி இசைவாணி மற்றும் இந்துக்கள் பற்றி தவறாக திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் பேசி வருவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு அனைத்து ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தனர்.