திண்டுக்கல் மாவட்டம் , அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரம் பகுதியில் உள்ள ரேடியன் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது . பள்ளி வளாகத்தை சுற்றி சுமார் 20 ஏக்கர் பரப்பளவுக்கு தோட்ட பகுதி உள்ளது. அங்கு இரவு காவலாளியாக பணியாற்றி வரும் சிறுமலை அகஸ்தியர் புரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் நாட்டு துப்பாக்கி வைத்து வன உயிரினங்களை வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்து இந்த பகுதியை கண்காணித்து வந்த போதும் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை .
இதே போன்ற தகவல் காவல் துறையின் இரகசிய தகவல் சேகரிப்பு அமைப்புக்கு கிடைத்தனை அடுத்து சம்மந்தபட்ட முருகனை தீவிரமாக கண்காணித்து வந்ததில் நேற்று இரவு பாலம் பட்டியை சேர்ந்த ஜான் சாமுவேல் என்பவருடன் சேர்ந்து நாட்டு துப்பாக்கிகளுடன் இருவரும் வேட்டைக்கு சென்றதனை உறுதிபடுத்தியதுடன் அம்மையநாயக்கனூர் காவல் துறையினருடன் சேர்ந்து ரேடியன் பள்ளி அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளை ஆய்வு செய்ததில் முருகன் , த/பெ வீரய்யா மற்றும் ஜான் சாமுவேல் , த/பெ பீட்டர் ஆகியோரை பிடித்து அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 நாட்டு ரக துப்பாக்கிகள் மற்றும் 13 வெடிக்காத தோட்டாக்கள் பறிமுதல் செய்ப்பட்டு குற்றவாளிகள் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்