தெலுங்கானா மாநிலம் முழுகுமாவட்டம் நகரம் மண்டலம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் மீது நக்சலைட்டுகள் மறைவான இடங்களில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
போலீசார் நடத்திய பதில் அடி தாக்குதலில் நக்சல் குழுவின் கமாண்டர் உட்பட எட்டு பேர் மரணம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. மற்ற நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் அந்த இடத்தில் பதுக்கி வைத்திருந்த பெரும் ஆயுத குவியலை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.