திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும் தாடிக்கொம்பு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின்படி நகர் ASP. சிபின் மேற்பார்வையில் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தர்மராஜ்(23), பாண்டித்துரை(19), வசந்த்வேல்(19), மாரிமுத்து(19) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 செல்போன்கள், 1 டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்