பண்டைய காலங்களில் முகலாய பேரரசர்கள், அவுரங்கசீப்,திப்பு சுல்தான், சோழ சேர பாண்டிய,பல்லவ தமிழ் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்த வெள்ளி,செம்பு,ஓட்ட காசு,ஒரணா,இரண்டா,ஒரு பைசா,இரண்டு பைசா பல்லாயிர கணக்கான பழங்கால பொருட்களை சேகரித்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்தி வரும் நாகர்கோவிலை சேர்ந்த முகமது அலி மேலும் ஆதிவாசி,பழங்குடியினர் பயன்படுத்திய வெள்ளி நகைகள்,நீலக்கல் மாலை
,15,16 ஆம் நூற்றாண்டில் உள்ள மண்பாண்டங்கள், கல்பாண்டங்கள் என்று சேகரித்து தொல்லியல் துறையால் சான்றிதழ் பெற்ற நபரின் இச்செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
நேற்று சேர்த்த பொருளை இன்று அழிக்கும் ஒருசில மனிதர்கள் மத்தியில் 500,600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பொருட்களை விலை கொடுத்து வாங்கி சேர்த்து,மாணவர்களுக்கு காட்சிப்படுத்தும் இந்த நபரின் செயலுக்கு அரசு முன்வந்து கெளரவிக்குமான என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.