கோக்கு மாக்கு
Trending

போதையில் புறக்காவல் நிலையத்தை சூறையாடிய பெண்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முருக கடவுளுக்கு ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது . இங்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கேரளா , கர்நாடகம் , ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பல்வேறு வட இந்திய மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் தினந்தோறும் வந்து வழிபட்டு செல்லும் மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது .

இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகதலம் சமீப காலமாக போதை ஆசாமிகளாலும் , லாட்டரி , விபச்சாரம் , திருநங்கைகளின் தொந்தரவு உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களின் புகலிடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்களும் , பக்தர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர் .

இவற்றுக்கு உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதையில் ஒரு பெண் பழனி பேருந்து நிலையத்தில் உள்ள காவல் துறையின் புறக்காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி சூறையாடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் நடந்து சில நாட்களை கடந்து விட்ட போதும் போதை ஆசாமிகளின் நடமாட்டம் குறையவே இல்லை தினமும் பல்லாயிரகனக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய ஆன்மீக தலத்தை மிகவும் மோசமான நிலையில் நகராட்சி , மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .

காவல் துறையினர் முறைகேடான மதுபான விற்பனை , குட்கா கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் , விபச்சாரம் , லாட்டரி போன்றவற்றை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button