கோக்கு மாக்கு
Trending

இறந்த வனக்காப்பாளர் குழந்தைகள் பெயரில் 7 இலட்ச ரூபாய் வைப்பு நிதி – வன அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் வழஙகினர்.

திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரகம் செம்பட்டி பிரிவு செங்கடாம்பட்டி பீட் வனக்காப்பாளர் திரு. வ .ராமசாமி வயது சுமார் 32 வனக்காப்பாளர்20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை முடித்து செல்லும் பொழுது செம்பட்டி முதல் வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் கூலாம்பட்டி பிரிவு அருகில் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் .

அவரது குடும்பத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இன்று ₹ 7,00,000/- ரூபாய் (ஏழு லட்சம்) பணத்தை மரணம் அடைந்த திரு இராமசாமியின் இரண்டு குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியாக அஞ்சலகத்தில் செலுத்தப்பட்டது .

அதற்கான ஆவணங்களை தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநிலதலைவர் சு.கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்டதலைவர் ஆறுமுகம், கொடைக்கானல் தலைவர் சுரேஷ்குமார் வழங்கினார்கள் இந்த நிகழ்வில் மாநில பொருளாளர் கார்த்தி, செயலாளர் புகழ் கண்ணன், பொருளாளர் சாமியப்பன், துணைதலைவர் திலகராஜ், இணை செயலாளர் சபரிநாதன், , செயலாளர் சங்கர் திருச்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, வத்தலகுண்டு வனச்சரக அலுவலர் இராம்குமார் மற்றும் திண்டுக்கல், கரூர்,கொடை க்கானல், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button