கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் தீவிர விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு முயற்சியாக அதிகப்படியான விபத்துகளை ஏற்படுத்தும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, செல்போன் பேசிக்கொண்டு டெம்போ வாகனத்தை ஓட்டி வந்த, தலக்குளத்தைச் சேர்ந்த பிரேம்சிஜூ என்ற ஓட்டுநர் மீது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கிய போக்குவரத்து விதிமீறலுக்காக ரூ.1500 அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் அபராதம் செலுத்திய பின் வாகனம் விடுவிக்கப்பட்டது.