குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் காட்டெருமை கூட்டங்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூரில் இருந்து பேரட்டிக்கு செல்லும் சாலையின் நடுவே காட்டெருமை விழுந்து கிடந்தது. இதை கண்ட கிராம மக்கள் நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் நிர்வாகிகள் அருகில் சென்று பார்த்த போது காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காட்டெருமை எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
உடனடியாக சின்ன வண்டி சோலைகிராம மக்கள் மற்றும் நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் நிர்வாகிகள் அனைவரும் சோர்வாக இருந்த காட்டெருமைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றினர். பின்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் சென்று பார்க்கும் போது காலில் காயங்களுடன் காட்டெருமை எழுந்து நடமாட முடியாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
இருந்தபோதிலும் காட்டுரிமை பரிதாபமாக உயிரிழந்தது.