திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இடமாக “கொண்டாநகரம்” பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற இதர கழிவுகள் சில கிலோ மீட்டர் தூரம் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இது போன்ற கழிவுகள் கொட்டப்படுவதால் குளத்தில் இருக்கும் நீரை பருகக் கூடிய கால்நடைகளும் நோய் தொற்றுக்கு உள்ளாகின்றது.
மேலும் ஒரு சில முக்கிய புள்ளிகளின் உதவியோடு இதுபோன்ற கழிவுகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் அவசர மற்றும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.