கடந்த 21 .12.2024 அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் ESI ரிங் ரோடு அருகே இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்கு எடுத்து வந்த கும்பல் பிடிக்கப்பட்டு இரண்டு யானை தந்தங்களுடன் சம்மந்தபட்ட வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர் .
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையும் , நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகன் சிலையும் கைப்பற்றி குற்றவாளிகள் இருவருடன் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கைப்பற்றப்பட்டு ஒரு குற்றாளியுடன் வனச்சரக அலுவலத்தில் ஒப்படைத்தனர் .
கடந்த இரு தினங்களில் நடந்த மூன்று குற்ற தடுப்பு நடவடிக்கைகளிலும் அதிரடி காட்டிய மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவின் தென் மண்டல துணை இயக்குநர் கார்த்தியேன் IFS , உதவி இயக்குநர் மதிவாணன் மற்றும் காவலர்கள் ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் தமிழக வனத்துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்ற பொருட்களுடன் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .