திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக பகுதிகளில் முயல் வேட்டையாடும் கும்பல் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வனப்பாதுகாப்பு படையினர் மற்றும் அய்யலூர் வனச்சரக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .
வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் கிராம பகுதியில் இருவர் வேட்டையாடியது உறுதிபடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர் .
அதேபோல் கோவிலூர் அருகே புங்கம்பாடி கிராம பகுதியில் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் . க
கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டு மாவட்ட வன அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவரது உத்திரவுபடி தலைக்கு 20,000 ரூபாய் வீதம் 1,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .