
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி கோம்பை பகுதியில் திரைப்பட குழுவினர் முகாமிட்டு சூட்டிங் எடுத்து வருகின்றனர். அங்கு செல்லும் பொது மக்களிடம் அவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் மொபைல் போனை புடுங்கி வைத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூட்டிங் நடைபெறும் பகுதியில் காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.