
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தி வரும் பட்டிக்குளத்திற்கும் கிழபுறமாக அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் அங்கு வரும் போதை ஆசாமிகள் குடிநீர் கிணற்று சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வலையின் மேல் அமர்ந்து கொண்டு மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை அங்கேயே உடைத்து எறிந்தும் குடிநீர் கிணற்று மேலேயே வாந்தி எடுத்தும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரை அசுத்தம் செய்தும் வருகின்றனர்.
இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றிற்கு பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.