
தூத்துக்குடி மாவட்டம் , நகர உட்கோட்டம் , வடக்கு காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் இருந்து மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் நகர் வடக்கு காவல் துறையினர் இணைந்து நேற்று (10/02/2025) அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் மேட்டுப்பட்டி திரேஸ்புரம் பகுதியில் வெளிநாட்டிற்கு கடத்தும் நோக்கத்தில் பதிக்கியிருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் சுமார் 200 கிலோ மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் பறிமுதல் 3 பேர் கைது
இந்த குற்ற சம்பவத்தில் பிடிபட்ட ராமநாதபுரம் மாவட்டம் வேதாள வடக்கு தெரு காலில் ரஹ்மான் மகன் சையது சாகுல் ஹமீது (37) , தூத்துக்குடி மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த முகமது இஹரீஸ் மகன் மன்சூர் அலி (36) மற்றும் முகமது மைதீன் மகன் முகமது ஷெரீப் (30) ஆகிய மூன்று பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட TN-65 BZ 5691 என்ற எண் கொண்ட ஈகோ வாகனம் , 1 இரு சக்கர வாகனம் , பிடிபட்ட வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குற்ற பொருள் சுமார் 200 கிலோ பதபடுத்தப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவற்றை தூத்துக்குடி பிராந்திய வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் .

வெகு நாட்களுக்கு பின்னர் இவ்வளவு பெரிய அளவில் தூத்துக்குடி பகுதியில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த பறிமுதல் சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல் கும்பல் குறித்து மத்திய மாநில உளவு அமைப்புகள் உட்பட பல துறைகளும் விசாரணையில் இறங்க இருப்பதாகவும் விரைவில் இந்த கடத்தல் கும்பல்கள் முழுவதும் கைது செய்யப்படுவார்கள் எனவும் இவர்களுக்கு பின்னனியில் இருந்து காப்பற்றி வரும் அரசியல் முக்கிய புள்ளி ஒருவரது விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.