
திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தினத்தன்று, ஓர் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, ஊர் மக்கள் ஒன்று கூடி, நிலா பெண்ணை ஒருமனதாக தேர்வு செய்கின்றனர்.
தேர்வு செய்யப்படும், வயதுக்கு வராத அந்த சிறுமியை, நிலாவுக்கு மனைவியாக பாவித்து கொண்டாடுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட அந்த நிலா பெண்ணிற்கு, ஒரு வார காலத்திற்கு, அப்பகுதியில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி, அங்குள்ள கோயிலில் வைத்து பால், பழம், பேரிச்சை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி, மகிழ்கின்றனர்.
நடப்பு ஆண்டில், குட்டம் ஊராட்சி தலையூத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் – தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் தீக்ஷா (13) தேர்வு செய்யப்பட்டார்.