
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான் கோட்டை ஊராட்சி சி .கூத்தம்பட்டியில் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் அடிப்படை வசதியான குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது .
இதில் 2019ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் கூட்டுக் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது ஆனால் இதுவரை ஊரில் காவேரி தண்ணீர் வரவில்லை . இதுவரை ஊராட்சி ஒன்றியமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆனால் ஊருக்கு காவிரி கூட்டு குடிநீர் தொட்டி அமைக்க 2019-2020 ஆம் ஆண்டு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பொது நிதியின் கீழ் பச்சமலையான் கோட்டை ஊராட்சி தரை தொட்டி அமைத்தல் மதிப்பீடு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அமைக்கப்பட்டது.

இதுவரை தொட்டி பயன்பாட்டிற்கு வரவில்லை காவேரி கூட்டு குடிநீர் வரவில்லை இதை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியமும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சி.கூத்தம்பட்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கூட்டு குடிநீர் தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.