திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுமலை மலை பகுதியில் குரங்கு ஒன்று சாலையோர சுவரில் அமர்ந்து செய்யப்பட்ட நெகிழி கழிவுகளை உட்கொள்ளும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு கோடை காலத்தில் சமூக வளைதலங்களில் பகிரப்பட்டதனை தொடர்ந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது சிறுமலை வனச்சரகம் மற்றும் சிறுமலை ஊராட்சி
இதற்கு காரணம் சிறுமலை சோதனை சாவடியில் சிறுமலைவாசிகள் தவிர மற்றவர்களது வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு என்ற அமைப்பின் பெயரில் வசூல் செய்யப்படும் கட்டணங்கள் தான் . ரூபாய் 20 முதல் வாகன வகைகளுக்கு தகுந்தார் போல கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது . இந்த கட்டண வசூல் மூலம் பெறப்படும் தொகையை வங்கியில் செலுத்தி சிறுமலை ஊராட்சி மற்றும் சிறுமலை வனச்சரகம் ஆகிய இரண்டும் சேர்ந்து அவ்வபோது சரிபாதியாக பிரித்துக்கொள்கின்றன .

பணத்தை பங்கு போடுவதோடு சரி எந்த வித சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளும் நடைபெறவே இல்லை என சுற்றுலா பணிகளும் இயற்கை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியபடிய கடந்து செல்கின்றனர் . ஏனென்றால் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க ஆள் இல்லை .
தற்போது கோடைகால வெயில் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டை போல் இல்லாமல் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வருவாயை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்திடவும் , வன உயிரினங்களுக்கு உணவு தண்ணீர் இருப்பை உறுதி செய்திடவும் சிறுமலை மலை சாலையில் வன உயிரினங்களுக்கு உணவளிப்பதை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறுமலை வனச்சரகம் மற்றும் சிறுமலை ஊராட்சி இரண்டும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது .