
நேற்று (20.03.2025 ம் தேதி ) முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகம்,சிங்காரா பிரிவு சிங்காரா காவல் பகுதிக்குட்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள நார்தன்ஹே காப்புக்காடு மற்றும் லீக்வுட்காப்பி எஸ்டேட் எல்லைப் பகுதியில் வழக்கமான களப்பணியாளர்கள்ரோந்து பணி மேற்கொள்ளூம் போது, பிற்பகல் சுமார் 2.00மணி அளவில் ஆண் யானை ஒன்று இரண்டு தந்தங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டு துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் மூலம் உடற்க்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடற்கூராய்வின் முடிவில் , இறந்தது சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், யானை கடந்த சில நாட்களாக சரிவர உணவு உட்கொள்ளாமல் உடல் மெலிந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. யானையின் வயிறு மற்றும் குடல் பகுதியில் அதிகப்படியான ஒட்டுண்ணி புழுக்கள் காணப்பட்டது.
யானை வயது முதிர்வு குறித்த காரணங்களால் இறந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது. மேலும் தடயவியல் மற்றும் அறிவியல் பூர்வ ஆய்விற்காக இறந்த யாளியின் உடல் உறுப்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.