
இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மைகுண்டு பகுதியில் கடல் அட்டைகள் கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது .

இதனை தொடர்ந்து இராமநாதபுரம் வனக்காவல் படை மற்றும் தமிழக வனத்துறையின் வன உயிரின குற்றதடுப்பு பிரிவினர் ஆகியோருடன் இணைந்து மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் குறிப்பிட்ட சில இடங்களை கண்காணித்து வந்தனர்.

அப்போது மைகுண்டு இரயில்வே கேட் வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர் . அதில் இருந்த பிளாஸ்டிக் கேன் உள்ளே சுமார் இருபத்தைந்து கிலோ மதிப்பிடக்கூடிய இறந்த நிலையில் கடல் அட்டைகள் இருந்தனை கண்டனர் .
வாகனத்தை ஓட்டி வந்த சேதுநகர் பகுதியை சேர்ந்த S. தாரிக் ( வயது – 29/2025) என்பவரை பிடித்து பிடிபொருட்களுடன் மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர் .