
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன . சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .
இங்கு முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது . உள்ளூர் கூலி ஆட்கள் மூலம் நடைபெற்று வந்த விவசாய பணிகள் கோவிட் நோய் தொற்று காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட சம்பள உயர்வினை அடுத்து சாணார்பட்டி , கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூலி ஆட்களை அழைத்து வந்து விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தோட்ட உரிமையாளர்கள் மாறினர் . தற்போது வட மாநிலத்தவர் என அடையாளபடுத்தப்படும் பலரும் விவசாய பணிகளுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர் . இவர்களை தோட்ட வேலைக்கு அழைத்து செல்லவும் வேலை நேரம் முடிந்ததும் திரும்பவும் அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விடுவதற்கும் சில நான்கு சக்கர லோடு வாகனங்கள் தோட்ட உரிமையாளர்களால் குத்தகை அடிப்படையில் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே போக்குவரத்து வாகன சட்டத்தின்படி லோடு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை . மேலும் சிறுமலையில் மதுபான கடை இல்லாத நிலையிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள்ள சந்தை போலி மதுபான விற்பனை கொடிகட்டி பறக்கிறது (வனத்துறை குடியிருப்பு அருகில் மற்றும் செயல்பாடாத காவல் உதவி மைய கூண்டு உட்பட ) .
பெரும்பாலான வாகன ஓட்டிகள் கஞ்சா மது போதையில் வாகனங்களை இயக்குவதாகவும் சில தினங்களுக்கு முன்னர் புதூர் பகுதியில் ஆட்களை ஏற்றி வந்த லோடு வாகனம் மோதி மாடு ஒன்று படுகாயம் அடைந்ததாகவும் நல்வாய்ப்பாக அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களது கூட்டத்தில் புகுந்திருந்தால் மனித உயிர் பலி ஏற்பட்டருக்கக்கூடும் என்றும் உள்ளூர் மக்கள் அச்சப்படுகின்றனர் .
சமீபத்தில் டெட்டனேட்டர் வகை வெடிகுண்டு வெடித்து மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்து மத்திய மாநில புலனாய்வு அமைப்புகள் நேரடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையிலும் வனத்துறை மற்றும் காவல் துறையினர் சிறுமலை மலை பகுதியை கண்டு கொள்வதாக தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
..