
சேரன்மாகாதேவி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது மனைவி லலிதா (40). இத்தம்பதியினருக்கு கல்பனா (18), லெட்சியாதேவி (14) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

லெட்சியாதேவி சேரன்மாகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முத்துக்குமார் இன்று மாலை ஆட்டோவில் தனது குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு சென்றார்.
ஆற்றில் குளித்து முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிய போது, சேரன்மாகாதேவி சார்நிலைக் கருவூவலம் அருகில் ஆட்டோ வந்தபோது அப்பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் லைன் பதிப்பதற்காக சாலையில் மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை குவித்து வைத்துள்ளனர்.
அப்போது ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலை ஓரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் குவியல் மீது ஏறி இறங்கிய போது, ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
இதில் முத்துக்குமாரின் இளைய மகள் லெட்சியா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த சேரன்மாகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சேரன்மாகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.