
வஃக்பு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறக்கோரி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே போன்று தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வஃக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் நியாஸ், கிரிப்சன்,
ராஜ பிரகாஷ் ஆகியோர்
தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும்,
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க நிர்வாகிகள் சித்திக், ராபின், தயாள், வழக்கறிஞர் முத்துக்குமார், லட்சுமணன், சிக்கந்தர், அப்துல் ரசாக், நரேன் மகாராஜா, அரபாத், சக்தி சிவசங்கர், மகளிர் அணி ராஜேஸ்வரி, முத்துச்செல்வி, உமா உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.