
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க நகராட்சி கூட்டம் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்றது.
இந்த நகராட்சி பகுதிகளிலுள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த ப்ளீச்சிங் பவுடர், பினாயில்,சுண்ணாம்பு தூள் போன்றவை வாங்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9)நடந்த நகராட்சி கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கு ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்க அனுமதி கேட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சமா? என்று எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் நகர் மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்….
தண்ணீருக்கு 10 ஆயிரம் கூட ஒதுக்காத நகராட்சி ப்ளீச்சிங் பவுடர்வாங்க 35 லட்சம் ஒதுக்குவது நியாயமா? என்று கேட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.