
அம்பாசமுத்திரம் தீர்த்தப்பதி அரசு மருத்துவமனை எக்ஸ்ரே எடுக்கும் பகுதி காலை முதலே மின்சார வசதி இல்லை என கூறப்படுகிறது

,எக்ஸ்-ரே எடுக்கும் அறைக்கு மாற்று ஏற்பாடாக மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் ஏதும் இயக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் எக்ஸ்-ரே எடுக்க முடியாமல் பல மணி நேரம் பரிதவித்தனர்.
குறிப்பாக நேற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளி ஒருவரை எக்ஸ்-ரே எடுக்க ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு எக்ஸ்-ரே படம் எடுக்க முடியாமல் தவித்துள்ள சம்பவம் மருத்துவமணை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் எக்ஸ்-ரே எடுக்க வந்த ஒருவர் மருத்துவரிடம் சென்று எக்ஸ்-ரே எடுக்கும் இடத்தில் கரண்ட் இல்லை எனக் கூறிய போது அவருக்கு ஊசி போட்டு விடுகிறேன் மாத்திரை எழுதி தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள், எலும்பு மருத்துவர் வந்த பின் அவரிடம் காட்டுங்கள் சரியாகிவிடும் என்று கூறியது நோயாளிகள் மத்தியில் அரசு மருத்துவமனை இப்படித்தான் இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பிய நிலையில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.
மருத்துவர் அறையில் மின்சாரம் உள்ளது ஆனால் எக்ஸ்-ரே எடுக்கும் அறையில் மின்சாரம் இல்லை என கூறி இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது..