
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் ஷாம் வில்வியம்ஸ் இவர் கரிசல் பட்டி பகுதியில் 7- ஆண்டுகளாக பிராய்லர் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றார்.
கடந்த சனிக்கிழமை காலையில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள பிறந்து மூன்று நாட்களே ஆன பிராய்லர் கோழிக்குஞ்சுகள் பண்ணையில் வளர்ப்புக்காக இறக்குமதி செய்துள்ளார்.

நேற்று மாலை கங்கணாங்குளம், சேரன்மகாதேவி,கரிசல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூரைக் காற்றுடன் பெய்த கனமழையால் கோழி பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம்,மேற்கூரை முற்றிலும் இடிந்து கீழே கோழிக்குஞ்சுகள் மீது விழுந்ததில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 3000 கோழிக்குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிலந்தது.

கனமழை மற்றும் சூரைக் காற்றில் கோழிப்பண்ணை மேற்கூறை இடிந்து விழுந்து ஒரே நாளில் 3000 கோழிக்குஞ்சுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.