
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இன்று சிறுமலை மலை பகுதிக்கு சில ஒப்பந்த ஊர்திகளை வாடகைக்கு எடுத்து சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா முடிந்து திரும்பி வரும் வழியில் ஓட்டுநர் வாகனத்தை கொண்டை ஊசி வளைவில் திருப்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவத்தில் வாகனத்தில் வந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சிலருக்கு மட்டும் அதிக அளவு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்கள் அவசர உதவி எண்ணில் தகவல் தெரிவித்ததனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

சிறுமலை வாகன விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினர்.