
விசில் நியூஸ்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாடக்கண்ணு நாடார் மகன் பரமசிவன் (வயது 72), பனை ஏறும் தொழிலாளியான இவர் தற்போது பதநீர் இறக்கும் காலம் என்பதால் வழக்கம்போல் அப்பகுதியிலுள்ள பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கியுள்ளார்.
அப்போது திடீரென மரத்தில் இருந்து வழுக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனடியாக அப்பகுதியினர் இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் தகவல் கொடுத்ததன் பெயரில் ஆழ்வார்குறிச்சிபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனையில் இருந்து முதியவர் வழுக்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..