
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாகாநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பழைய வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டுவதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தால் ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது வரை கட்டுமான பணி நடைபெறவில்லை
ஒப்பந்தம் எடுத்தவர் எங்களுக்கு லாபம் பள்ளியில் உள்ள பழைய ஜன்னல் கதவு என சொல்லி ஆறு மாதத்திற்கு முன்பே அனைத்தையும் எடுத்துவிட்டு சென்றுவிட்டனர்
பள்ளி கட்டுமான பணி தற்போது வரை நடைபெறவில்லை எனக் கூறி ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் எதைப் பற்றியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை
புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படுமா அல்லது பழைய கட்டிடம் அப்படியே இருக்குமா
மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்பறை இல்லாமல் கஷ்டப்படும் பொழுது அரசு ஒதுக்கிய நிதியையும் மாணவர்களையும் பற்றி அதிகாரிகள் அலட்சியமாக ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு
மாவட்ட ஆட்சியரும் பள்ளி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை