
திண்டுக்கல் எரியோடு அருகே மாரம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சாலையில் அமைந்திருக்கும் குடிநீர் குழாய்களில் சென்று சைக்கிளில் இரண்டு குடங்களில் குடிநீரை பள்ளிக்கு கொண்டுவர ஆசிரியர்கள் கூறியுள்ளனர் மாணவர்கள் சீருடை உடன் ஆபத்தான முறையில் கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் பள்ளியை விட்டு வெளியே சென்று இரண்டு குடங்களில் குடிநீர் சேகரித்து பள்ளிக்கு கொண்டு வந்தனர்.

இந்த சாலை அதிகளவு வாகனங்கள் செல்லும் ஆபத்தான பகுதியாகும், மணல் லாரிகள் அதிக அளவு இந்த வழியாக செல்வது வழக்கம்.
சைக்கிளில் குடம் கட்டி கொண்டு சென்ற போது ஒரு மாணவன் கொண்டு சென்ற தண்ணீர் குடம் கீழே விழுந்து உடைந்தது அதிர்ஷ்டவசமாக மாணவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்