
கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்காரபுரம் கோட்டம் , அரியலூர் துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணிபுரியும் இராஜேந்திரன் என்பவரின் ஓய்வூதிய தொடர்பான கோப்புகளை பரிந்துரைக்க ரூ 10,000/- இலஞ்சமாக கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலக நிர்வாக மேற்பார்வையாளர் செந்தில்குமார் பெற்ற போது கள்ளக்குறிச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.