
சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் உடனடியாக அந்த ஸ்பா சென்டரை கண்காணித்தனர். அப்போது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதியானதையடுத்து ஸ்பா சென்டரில் புகுந்து சோதனை நடத்தி வெளிமாநில பெண்களை மீட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.இதன்பின்னர் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த மேனேஜர் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஹேமா ஜுலியோ(50) கைது செய்தனர். இவருக்கு சென்னை முழுவதும் 13க்கும் மேற்பட்ட ஸ்பா சென்டர் இருப்பது தெரியவந்துள்ளது