
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது சிறுமலை மலைப்பகுதி . இது வருவாய் துறையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா , சிறுமலை ஊராட்சிக்கு கட்டுப்பட்ட பகுதியாகும்.
வனத்துறையில் – திண்டுக்கல் மாவட்ட வன அலுவலரான ராஜ்குமார் IFS -ன் கீழ் உள்ள மாவட்ட தலைமையிட வனசரகமானது சிறுமலை வனசரகம் . இதில் திண்டுக்கல் நகர் பகுதி , கொடைரோடு , சிறுமலை என மூன்று பிரிவு உள்ளது . ஒவ்வொரு பிரிவும் ஒரு வனவர் தலைமையில் கண்காணிப்பு , வழக்குபதிவு , பல்வேறு வகை அனுமதிகளை கொடுப்பதில் ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சிறுமலை மலை பகுதியில் மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக வனத்துறை சார்பாக பல்லுயிர் பூங்கா மற்றும் வன சோதனை சாவடி அருகில் நடைபயிற்சிக்கான பணிகள் என பல்வேறு பணிகள் பல கோடி ரூபாய் செலவில் தாயார் செய்து வருகின்றனர். இ
சுற்றலா பயணிகள் தங்குவதற்கு என்றே பல்வேறு சொகுசு பங்களாக்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இது போன்று பல நூறு வீடுகள் சொகுசு விடுதிகளாக எந்தவித அனுமதியும் இன்றி கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ளன .
அதே போல இங்கு வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் வனப்பகுதியில் மட்டுமே கிடைக்கும் தேன் வகைகளும் முடவாட்டு கிழங்கு என்னும் ஒருவகை பாறை சந்துகளில் மட்டுமே வளரும் கிழக்கு விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது.

விவசாயம் செய்பவர்கள் மட்டும் இன்றி பலரும் இங்குள்ள நிலங்களை வணிக மற்றும் சுய தேவைகளுக்காக ஆக்கிரமித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகஸ்தியர்புரம் அடுத்து உள்ள தண்ணி பாறை மேடு (இங்கு தான் வனத்துறையின் கண்காணிப்பு கோபுரம் ஒன்று உள்ளது) பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் அளவிற்கு வனப் பகுதியில் உள்ள புல்மேடு பகுதியை சுத்தம் செய்துள்ளனர்.
இது போன்று பல்வேறு இடங்களும் புதிய ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி சிறுமலையின் இயற்கை அழகினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
தண்ணிபாறை மேடு ஆக்கிரமிப்பு செயல்பாடு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் வனத்துறையினர் யார் மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இது போன்று தொடர்ந்து சிறுமலை மலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது வனத்துறையினின் ஆசியுடன் மட்டுமே நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது மட்டுமல்லாது ஏற்கனவே பல்லுயிர் பூங்கா நிலத்தை ரியல் எஸ்டேட் நபர்களுக்கு சாலை ஒதுக்கியது , JCB , KITTACHI , BOREWELL பயன்பாடு , வன உயிரினங்கள் நடமாடும் பகுதியை மறித்து வேலி அமைத்து ஆக்கிரமிப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம் சிறுமலையில் நடைபெறும் குற்றங்களை
சிறுமலை வனச்சரகத்தில் குற்றச்சம்பவங்களில் எந்த சமரசமும் ஆக மாட்டோம் என கூறிக்கொள்ளும் அதிகாரிகள் உள்ள நிலையில் இவ்வளவு குற்றங்கள் ஏன் நடைபெற்று வருகிறது என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் .
தற்போது திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார் IFS மற்றும் மண்டல வனபாதுகாவலர் காஞ்சனா IFS இருவரும் பல முறை பல்லுயிர் பூங்கா – வை பார்வையிட செல்லும் நிலையிலும் இந்த சம்பவங்கள் எதுவும் கண்ணில் படாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் .
நாமே பல முறை செய்தி வெளியிட்டும் மாவட்ட மற்றும் மாநில உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை ஒரு சிறு விசாரணையோ அல்லது சம்பந்தபட்ட அதிகாரிகளை எச்சரிக்கவோ மாவட்ட மற்றும் மாநில உயரதிகாரிகள் உட்பட யாருக்குமே நேரமில்லையா அல்லது சம்மந்தபட்ட குற்றவாளிகளிடம் உயரதிகாரிகளும் விலை போய்விட்டனரா என வேதனையுடன் புலம்பு வருகின்றனர் விபரம் அறிந்தவர்கள் .