
மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – போலீஸ் குவிப்பு
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் பேரூராட்சி தலைவியாக உள்ளார்,
இந்த நிலையில் பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று நடைபெற்றது..
மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் 15 வார்டு உள்ளது இதில் ஏற்கனவே ஒரு கவுன்சிலர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
இதையொட்டி தற்போது மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது..
இதையொட்டி கவுன்சிலர்கள் தனித்தனியாக சோதனை செய்யப்பட்டு தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
தற்போது தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கு வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது ஒவ்வொருவராக சென்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்
தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்த நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்ற 13 கவுன்சிலர்களும் வாக்கெடுப்புக்கு ஆதரவு என தெரிவித்து வாக்களிப்பு..
இதனால் அந்தோணியம்மாள் மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி பதவியை இழக்க இருக்கிறார்..
அடுத்த தலைவரை தேர்நதெடுப்பது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து முடிவெடுப்பதாக செயல் அலுவலர் தெரிவித்து உள்ளார்..
இதனால் மணிமுத்தாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ..