
கொள்ளை அடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் இடம் வாங்கிய மங்கி கொள்ளையர்கள்
திண்டுக்கல்,R.M.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், வடமதுரை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வைர நெக்லஸ், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் மற்றும் வடமதுரை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் காதர்மைதீன், பாண்டியன், நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ், காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல்,ரவீந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர். மற்றும் சிசிடிவி காவலர்கள் ஜான், செல்வி சைபர் கிரைம் காவலர்கள் மணிகண்டன், சக்திவேல், கண்ணன் ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மங்கி குல்லா கொள்ளையர்கள் தன்ராஜ் (எ) தேவ் (28),அரவிந்த்(24), சுதாகர்(45) ஆகியோரை 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வெள்ளி குத்துவிளக்கு, வைர நெக்லஸ், ரூ.40 பணம், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கார் மற்றும் மங்கி குல்லா கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
