
எங்க போனாளோ தெரியல.. புருசன விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டா…
ஆனா அவன்தான் இவள கண்டுக்கமாட்டான்… இவளும் புருஷனுக்காக கோயில் குளம்னு சுத்திகிட்டே இருப்பா.. புருஷன் கூட இருக்க முடியாம எந்த குளத்துல விழுந்தாளோ.. இல்ல எந்த சாமியார் கிட்ட மாட்டினாளோ தெரியல… இது தான் நெல்லையில இருக்கற பணகுடி மக்களோட பேச்சா இருக்கு.
இப்படி ஊர் மக்கள் பேசற அந்த பெண் யாரு…அவரு ஏன் கோயில், குளம்னு அலையனும்… காணாமல் போன பெண்ணுக்கு நடந்தது என்ன என்பதை விரிவா பாப்போம்…
கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த கயல்விழி என்ற பெண் காணாமல் போனதாக பழவூர் காவல்நிலையத்தில் அவரது தந்தை சிவலிங்கதுரை புகார் கொடுத்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்து கயல்விழிக்கும், அவருடைய கணவருக்கும் நெருக்கம் இல்லாமல் இருந்து இருக்கு.
இதனால், தன் மேல் கணவருக்கு பாசம் வர வேண்டுமென கயல்விழி கோயில் கோயிலாக அலைந்துள்ளார். இந்த நிலையில்தான் திடீரென அவரை காணவில்லை என்று சொல்லி இருக்காங்க. எவ்வளவு விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் மாயமான கயழ்விழியை கண்டுபிடிக்க வழி இல்லாததால் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர் பழவூர் போலீஸ்.
இந்த நிலையில, கயல்விழி காணாமல் போகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வருது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி வழக்கு ஒன்றில் சிக்கி இருக்காரு. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 6 மாதத்துக்கு முன்னாள் கயல்விழி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.
அதாவது, நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கதுரை என்பவரோட மகள் தான் கயல்விழி. கயல்விழி திருமணமாகிய நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்றோருடன் இருந்துள்ளார். கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென நினைத்த கயல்விழி கோயில், குளம்னு சுத்தி இருக்காங்க. அப்போதுதான் கயவிழிக்கு தூத்துக்குடியை சேர்ந்த
சாமியார் சிவசாமி அறிமுகமாகி இருக்காரு. கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டுமென சாமியாரிடம் கயல்விழி கேட்டு இருக்காங்க.
அதுக்கு, கணவன் கூட உன்ன சேர்த்து வைக்க வேண்டும் என்றால், மாந்த்ரீக பரிகார பூஜை செய்ய வேண்டும், அதுக்கு பணம் தேவைப்படும் என்று சொன்ன சிவசாமி தன்னுடைய வலையில் கயல்விழியை விழ வைத்துள்ளார். சிவசாமி சொன்னதை எல்லாம் கேட்ட கயல்விழி கணவரோட சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் பணத்தை வாரி கொடுத்து இருக்காங்க.
பரிகார பூஜை செய்தும் கணவன் தன்னை ஏத்துக்காததால் அதிருப்தியான கயல்விழி மறுபடியும் சாமியார் சிவசாமியை தொடர்பு கொண்டு இருக்காங்க. அவர் சொன்னபடி கணவருடன் சேர்ந்து வாழாததால் கொடுத்த பணத்தை சிவகாமி திரும்ப கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமான சிவசாமி ஒரு திட்டத்தை போட்டு இருக்காரு.
கயல்விழியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டுமென நினைத்த சிவசாமி, தனது சகோதரியின் மகனான மாயாண்டி ராஜா, கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி மற்றும் வீரவநல்லூரை சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து, கயல்விழியை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி, கயல்விழியிடம் நாசுக்காக பேசிய சிவசாமி தன்னோட திட்டத்தின் படி அவர சுசீந்திரம் வரவழைத்துள்ளார். சிவசாமியின் பேச்சை கேட்ட கயல்விழியும் அங்க போயிருக்காங்க. சுசீந்திரத்தில் சிவசாமியுடன் சேர்ந்து அவருடைய கூட்டாளிகளும் காரில் காத்து கொண்டிருந்துள்ளனர். கயல்விழி வந்ததும், அவரை கார்ல ஏற்றியதுடன், கயல்விழி கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, அவர் அணிந்து இருந்த நகையையும் எடுத்து இருக்காங்க.
இதன் பிறகு கயல்விழி உடல என்ன செய்வது என யோசித்த கூட்டாளிகள், சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் ஊரில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள மணிமுத்தாண்குளம் கால்வாயில உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர். இது எல்லாம் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததும், சிவசாமியையும், அவரது கூட்டளிகளையும் கைது செய்த போலீசார், மணிமுத்தான்குளம் கால்வாயில் தீயணைப்பு துறை உதவியுடன் கயல்விழியின், உடைகள் மற்றும் எலும்புக்கூடு பாகங்களை கண்டெடுத்துள்ளனர்.
ஆறு மாதத்துக்கு முன்னால் காணாமல் போன பெண், சாமியாரை நம்பி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
				
