
78 வயதான முதியவர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓட்டிய சம்பவம் நெல்லையை அதிர வைத்துள்ளது. முதியவருக்கும், மகளுக்குமான பிரச்சனை என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு ஜெயலட்சுமி என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். ஜெயலட்சுமியின் தந்தை வேலு (78)வுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வேலுவுக்கு முதுகு வலியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் அவருக்கு கண்புரை பாதிப்பும் இருந்துள்ளது.
இந்த நிலையில் வயதான தனது தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து ஜெயலட்சுமி பார்த்து வந்துள்ளார். ஆனாலும், மகள் தன்னை சரியாக பார்த்து கொள்வதில்லை என்று ஜெயலட்சுமியை வேலு திட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. தந்தை தானே என்று ஜெயலட்சுமியும் பெரிதாக எதுவும் எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் காலையில் வேலைக்கு சென்ற காளிமுத்து மாலை வீடு வந்து பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது.
தன் மனைவி ஜெயலட்சுமிக்கு செல்போனில் அழைத்துள்ளார். அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த காளிமுத்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே ஜெயலட்சுமி தலை, கை, கால்களில் காயங்களுடன் இறந்து கிடந்தார். உடனே போலீஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அங்கு, காளிமுத்து இல்லாதது தெரிய வந்தது.
எப்பொழுதும் வீட்டிற்குள் இருக்கும் காளிமுத்து அன்று இல்லாததால் அவர் மீது சந்தேகப்பட்ட போலீசார், காளிமுத்துவை தேடி பிடித்தனர். விசாரணையில் மகள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் ஜெயலட்சுமியை காளித்துமுத்து அடித்து கொன்றது அம்பலமானது.