
திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசாருக்கு சில செல்போன் கடைகளில் ஒரிஜினல் செல்போன் உதிரிபாகங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் விற்பதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார் கரூரில் செல்போன் கடைகளில் சோதனை மேற்கொண்டபோது 4 கடைகளில் ஆப்பிள் செல்போன் தயாரிப்புகள் பேரில் போலியான புளூடூத் ஹெட்செட்கள், செல்போன் கேஸ் கவர்கள், டேட்டா கேபிள்கள், சார்ஜர் ஹெட் போன்றவை விற்றது கண்டுப்பிடிக்கப்பட்டு இது தொடர்பாக கோபால்புரி(42), விக்ரம்சிங்(31), கண்பத்(25), கோபரம்(30) ஆகிய 4 பேரை கைது செய்து.
அவர்களிடமிருந்து ரூ.10,76,700 மதிப்புள்ள போலி தயாரிப்புகளை பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்