கோக்கு மாக்கு
Trending

அரசு கல்லூரிகளில் நர்சிங் படிக்க என்ன கட்-ஆஃப் தேவை?

தமிழ்நாட்டில் பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் நிரப்பப்படுகிறது.

நீட் மதிப்பெண்கள் அல்லாத மருத்துவப் படிப்புகளில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களின் முதல் தேர்வாக பி.எஸ்சி நர்சிங் படிப்பு உள்ளது. இந்தாண்டுக்கான நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு என்பது அரசு மருத்துவக் கல்லூரிகளை நோக்கியே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 கல்லூரிகளில் நர்சிங் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. அவையில்லாமல் சுமார் 254 தனியார் கல்லூரிகளில் நர்சிங் படிப்பு வழங்கப்படுகிறது.

செவிலியர் படிப்பு வழங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் 10 இடத்திற்குள் உள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நர்சிங் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நர்சிங் அரசு மருத்துவக் கல்லூரி என மொத்தம் 6 கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் படிப்புகள் வழங்கப்படுகிறது.

12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு

12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள 3 பாடங்களின் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 3 பாடங்களின் எடுத்த மதிப்பெண்கள் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகிறது.

கட்-ஆஃப் மதிப்பெண்களை கணக்கிடுவது எப்படி?

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவு மாணவர்கள்

உயிரியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் முழுமையாக அப்படியே எடுத்துகொள்ளவும். இயற்பியல் மற்றும் தாவரவியல் பாடங்கள் எடுத்த மதிப்பெண்கள் இணைத்து 100க்கு கணக்கிட வேண்டும்.

உதாரணத்திற்கு உயிரியலில் 100க்கு 89 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அதனை அப்படியே எடுத்துகொள்ளவும். இயற்பியல் – 87, வேதியியல் 88 மதிப்பெண்கள் என்றால், 100 மதிப்பெண்களுக்கு 87.5 என வரும். எனவே, 89 + 87.5 = 176.5 என்பதே கட்-ஆஃப் மதிப்பெண் ஆகும்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

இந்த பிரிவு மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை இணைத்து 100 மதிப்பெண்களுக்கு கொண்டு வரவும். அதே போன்று, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை இணைத்து 100 மதிப்பெண்களுக்கு கொண்டு வரவும். இதனை இரண்டையும் கூட்டினால் வருவதே கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகும்.

2025 கட்-ஆஃப் மதிப்பெண்கள் எப்படி அமையும்?

அரசு கல்லூரிகளில் நர்சிங் படிக்க என்ன கட்-ஆஃப் வரை தேவைப்படும் என்ற கேள்வி பொதுவாகவே மாணவர்களுக்கு எழுகிறது. அந்த வகையில், எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்ன என்று பார்ப்போம்..

B.Sc Nursing படிப்பிற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் கட்-ஆஃப் என்பது சிறிய ஏற்ற தாழ்வுடன் அமைந்துள்ளது.

2022 – 196.5 – 91
2023 – 200 – 100.5
2024 – 189.5 – 97

கடந்த ஆண்டு அதிகபடியாக 189.5 வரையும், குறைவாக 97 வரையும் அமைந்துள்ளது.

2025-ம் ஆண்டில் அதிகபடியாக 195 கட்-ஆஃப் எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார். 192 முதல் 196 வரை கட்-ஆஃப் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button