
சுத்தமும்… சுகாதாரமும்…. இல்லாத பேருந்து நிலைய உணவு விடுதிகள்… கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை…
சேலம் புதிய பஸ் நிலையம் பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான பேருந்து நிலையம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தில் ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்படுகின்றன.
துரித உணவிற்கு பயன்படுத்தும் ப்ரைட் ரைஸ் பொதுமக்கள் உணவு அருந்தும் மேஜையின் மேலேயே கொட்டி வைத்து ஈக்கள் மொய்த்தபடி உணவுக்காக பயன்படுத்தும் அவலமான நிலையில் பேருந்து நிலைய உணவு விடுதிகள் உள்ளது …
இதுகுறித்து நாம் ஏதாவது கேட்டால் ஓட்டல் ஊழியர்கள் மிரட்டும் தொணியிலேயே பேசுகிறார்கள்… யாருக்கும் பயப்படாமல்… எதைப் பற்றியும் யோசிக்காமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாய் கொண்டுள்ள உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேருந்து பயணிகள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோள்….