
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை ஓடந்துறை பஞ்சாயத்து மனிதன் இனக்கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் உணவுக்காக குரங்குகள் மாடுகள் போன்ற விலங்குகள் உட்கொள்ளும் காட்சி.
இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதித்த ஓடந்துறை பஞ்சாயத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வன விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ப
ஊட்டி சாலை சம்பந்தமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பல்வேறு விதிமுறைகளை சுட்டிக்காட்டி அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ள நிலையிலும் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் நெகிழி கழிவுகளை கொட்டுவது , அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் , உணவகம், தங்கும் விடுதி இப்படி எண்ணற்ற வகையில் அனுமதி கொடுத்தது யார் என்றும் தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை செயலாளர் உள்ளாட்சித் துறை அமைச்சர் இந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிதி மீறல்களுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , குப்பைகளை கொட்ட அனுமதி கொடுத்து அதிகாரிகள் மஞ்சம் உடந்தையாக செயல்பட்ட அனைத்து துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இனிமேல் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க போர்க்கால அடிப்படையில் அதிரடியான நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த குப்பைகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.