
தென்காசி மாவட்டம் அருவிகளின் சங்கமான குற்றாலம் நீர்வீழ்ச்சிகளின் நகரமாகும், குற்றாலத்திற்கு சீசன் நேரங்களில் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குளித்து செல்வது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வாகும், குற்றால நீர்வீழ்ச்சியில் குளித்த அனைவருமே உணவருந்த வரும் முக்கிய இடம் பிரானூர் பாடர் பகுதியாகும், தினமும் மதியம்
மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து உணவு உண்டு செல்வதால் அதிகப்படியான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது, கடந்த வருடங்களுக்கு முன்பாக இந்த நெருக்கடியை போக்கும் வண்ணம் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை பிரித்து சென்டர் மீடியன் அமைத்து இரு புறங்களிலும் பாதசாரிகள் சென்று வருவதற்கு ஏதுவாக பேவர் பிளாக் மூலம் பாதையை அமைத்து கொடுத்தனர், இதை சில காலங்கள் மற்றும் பயன்படுத்திய மக்கள் தற்போது அந்தப் பாதை எங்கே என்ற கோரிக்கை சுற்றுலா பயணிகள் இடத்திலும் பொதுமக்களிடமும் கேள்வியாக உள்ளது, இந்த பாதையை இந்தப் பகுதி வியாபாரிகள் தங்களது விளம்பர போர்டுகளை வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி நடைபாதைகளை முழுவதுமாக ஆக்கிரமித்து பொதுமக்கள் செல்லாத வகையில் கடைகளில் அமைத்து இருப்பது பொது மக்களுக்கு பெறும் இடையூறாக உள்ளது, இதனால் இதை பயன்படுத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உணர்ந்து இந்த பாதையை பயன்படுத்த உதவிட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….