
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதிக்குள் 110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி;
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு அணை அருகே அகஸ்தியர் காலனி சின்ன மைலார் பெரிய மைலார் சேர்வலாறு இஞ்சிக்குழி ஆகிய ஐந்து இடங்களில் காணி பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்,

இதில் காரையாறு அணையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் இஞ்சிக்குழி அமைந்துள்ளது.
இங்கு ஆரம்பத்தில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது மூன்று குடும்பத்தினர் மட்டுமே நிலையாக வசிக்கின்றனர்.
சில குடும்பத்தினர் காரையார் அணை அடிவாரத்தில் தங்கி, விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக இஞ்சிக்குழி சென்று வருகின்றனர்.
அந்த இஞ்சிக்குழி கிராமத்தில் 110 வயதுடைய குட்டியம்மாள் பாட்டியும் வசித்து வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணு இஞ்சிக்குழி சென்றபோது குட்டியம்மாள் பாட்டிக்கு அரசின் முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா என்று கேட்டார் அதற்கு பார்ட்டி இல்லை என்றதால் கீழே இறங்கிய உடனே குட்டியம்மாள் பாட்டிக்கு முதியோர் பென்சின் வழங்க சிறப்பு உத்தரவை பிறப்பித்தார்.

அதன் பெயரில் காரையாறு தபால் அலுவலகத்தில் இருந்து குட்டியம்மாள் பாட்டிக்கு மாதந்தோறும் மணியார்டர் மூலம் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது, ஒரே ஒரு மணியாடருக்காக காரையாறு தபால் அலுவலர் கிறிஸ்துராஜா மாதந்தோறும் காட்டுக்குள் நடந்தே சென்று பாட்டிக்கு பணத்தை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் முதியோர் உதவித்தொகை கிடைத்து நான்கு ஆண்டுகளான நிலையில் தற்போது குட்டியம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக தளர்ந்து காணப்படுகிறார்.
சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள் இருந்து வருகிறார்.

யானைகள் சிறுத்தைகள் கரடிகள் போன்ற ஆபத்தான விலங்குகள் வாழும் நடுக்காட்டில் எந்த பயமும் இல்லாமல் குட்டியம்மாள் பாட்டி வாழ்ந்து வருகிறார் இஞ்சி குழியில் வசிக்கும் மக்கள் அடர்ந்த காட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது கீழே இறங்கி காரையாறில் உள்ள ரேஷன் கடையில் இருந்து அரிசி மற்றும் பிற மளிகை பொருட்களை வாங்கி செல்வார்கள், ஆனால் குட்டியம்மாள் பாட்டி வயதுக்கும் காரணமாக எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியபோது இஞ்சி குழியில் மூன்று குடும்பத்தினர் வசிக்கிறோம் போதிய வசதி இல்லாததால் பலர் இங்கிருந்து கீழே இறங்கி விட்டனர் ஆனால் நான் கீழே செல்ல மாட்டேன் காட்டுக்குள் தான் பிறந்து வளர்ந்தேன் அதனால் யானை போன்ற விலங்குகளை பார்த்து எனக்கு பயமில்லை யானைகள் சத்தத்தை கேட்டு தான் வளர்ந்தேன் இப்போதும் யானைகளை சத்தத்தை கேட்டு தான் அன்றாடம் கண் விழிக்கிறேன் என்றார்..