
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து வரும் ஜெகதீசன் என்பவர் பெண்கள் இருக்கும் வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து அராஜக போக்குடன் பேசும் வீடியோ.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தில் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரிய ஒன்றாகும்.
.
திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு குள்ளாக்கியது.
காவல்துறையில் விசாரணை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் இதுபோன்ற காவல் உதவி ஆய்வாளர்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் எவ்வாறு பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்.
ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால் என்னென்ன சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஜெகதீசன் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை பாயுமா?.. எதிர்பார்ப்புடன்!..